சிறுவனின் அசாத்திய திறமை; இணையத்தில் வைரலாகும் பாடல்.!
கிட்டத்தட்ட நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பாடல் பாடும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த சிறுவன் முன்பள்ளியில் வைத்து பாடிய பாடலே இவ்வாறு வைரலாகி வருகிறது.
தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில், வாலியின் வரிகளில் உருவான “தென்மதுரை வைகை நதி” என்ற பாடலையே குறித்த சிறுவன் பாடியுள்ளான்.
குறித்த சிறுவன் யார்? எந்த இடத்தை சேர்ந்தவன் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் குறித்த சிறுவனின் பாடலை கேட்டு இரசித்த பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.