உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சிலாபம், அம்பகதவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாரிய கணினி குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 129 சீன ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுடன் வியட்நாமை சேர்ந்த 10 ஆண்கள் மற்றும் 3 பெண்கள், தாய்வான் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 99 கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 நவீன ரக கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இவை அனைத்தும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வெளிநாட்டவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அம்பகதவில பகுதியில் உள்ள இந்த விடுதிக்கு வந்து தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களின் நடமாட்டம் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இவர்கள் விடுதிக்குள்ளேயே முடங்கியிருந்து சர்வதேச ரீதியிலான கணினி மோசடிகள் அல்லது நிதி மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டு, மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0