உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற பெரிய வியாழன் திருப்பலியும் பாதங்களை கழுவும் சடங்கும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (2) மாலை பெரிய வியாழன் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அருந்திய இறுதி இரவு உணவு மற்றும் அவர் நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவு கூறும் நாளே பெரிய வியாழன் ஆகும்.

பெரிய வியாழன் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று (2) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமானது.

இந்தத் திருப்பலியின் முக்கிய அம்சமான பாதங்களைக் கழுவும் சடங்கு இடம்பெற்றது. தாழ்மையின் அடையாளமாக இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியதை நினைவுகூரும் வகையில், மன்னார் மறைமாவட்ட ஆயரினால் 12 பேரின் பாதங்களைக் கழுவும் சடங்கு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இயேசு அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தனது உடல் மற்றும் இரத்தமாகப் பகிர்ந்தளித்ததன் மூலம் நற்கருணை வழிபாட்டையும், குருத்துவத்தையும் நிறுவிய நாளாக இது கருதப்படுகிறது.

திருப்பலிக்கு பிறகு நற்கருணை பீடத்திலிருந்து மாற்றப்பட்டது. இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் அமைதியான முறையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

பெரிய வாரத்தின் தொடக்க நாளான இத் திருப்பலி, புனித வெள்ளியின் துயர நிகழ்வுகளுக்கு முந்தைய முக்கியமான வழிபாடு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0