உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 02.ஏப்ரல்.2026 இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது சந்தேக நபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் ரூ. 91, 100 அபராதத்தையும், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நல்லதண்ணி ஸ்ரீ பாத வீதியில் உள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்தமையால் வனப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பகுதி தீயில் அழிந்துள்ளது ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகள், மாஸ்கெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து மலையகத்தில் நிலவும் வெப்பமான காலநிலையால் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன மனித செயற்பாடுகள் காரணமாகவே பல பகுதியில் தீ பிடித்து எரிந்து வருகின்றது இதனால் காடுகளுக்குத் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக,  பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு அலுவலகத்தின் வன அதிகாரி வி.ஜே.ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0