உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிலக்கரி மோசடியின் பின்னணியில் அநுர.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (02) நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் கொள்கையானது, மற்றவர் பையைத் திருடிவிட்டு ‘திருடன் திருடன்’ என கத்திக்கொண்டு ஓடும் ஒரு பிக்பொக்கெட் திருடனின் செயலைப் போன்றது. நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்களை ஜனாதிபதி பாதுகாக்கின்றார். ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகளைப் பார்க்கும்போது, அவரே இந்த மோசடியின் பின்னணியில் இருப்பது தெளிவாகிறது.

தற்போதைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர், ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்குக் கொண்டுவரப்பட்டவர், அவர் மீது ஏற்கனவே மோசடி குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், அரச ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை.

விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை அழிக்கும் செயலாகும் என்றார்.

அரசாங்க தரப்பினர் அண்மைக் காலமாக மத வழிபாடுகளில் ஈடுபடுவது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
மதத்தை நம்பாதவர்கள், மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மற்றும் தானம் வழங்குவதை ஒரு நாடகமாகப் பார்த்தவர்கள், இன்று புதிய வீட்டிற்குச் செல்லும்போது தானம் வழங்கி மதச் சடங்குகளில் ஈடுபடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதுவே பௌத்த தர்மத்தின் சக்தி, என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0