திடீரென ஏற்பட்ட தீப்பரவல்.!
நேற்று காலை 9 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரக்காடு கிராம அதிரடிப் படையின் முகாம் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ ரக்காடு கிராமத்தில் உள்ள பைன்ஸ் 44 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட லக்சபான வாழமலை ஒட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பைன்ஸ் வனப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை நல்லதண்ணி பொலிஸார், ரக்காடு அதிரடிப் படையினர் மற்றும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து 6 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
தீப்பரவல் காரணமாக சந்தேகத்தின் பேரில் லக்சபான வாழமலை பிரிவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.