உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா விஜேநாயக்கவை கைது செய்ய திறந்த பிடியாணை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம், இன்று தனது தீர்மானத்தை அறிவித்து இந்த பிடியாணைகளை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை இலங்கையின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால் அவர்களைக் கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் கட்டளையிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

83 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0