நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!
கண்டி – தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கந்துர பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (01) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தலாத்துஓயா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் தனது நண்பர்கள் குறித்த பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.