உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்றையதினம் அதிகாலை 01.00 மணியளவில் நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளி விபத்தில் காயமடைந்த ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் கொத்மலை – தவலந்தென்ன நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில், வேனின் உரிமையாளர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் என மொத்தம் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்றவுடன் வேன் உரிமையாளரின் மகன், பிரதான வீதிக்கு வந்து அந்த வழியாகச் சென்ற ஒரு கெப் ரக வாகனத்தை நிறுத்தி உதவி கோரியுள்ளார்.

பின்னர் கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்துக்குள்ளான மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளதாகக் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0