உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, சமஷ்டி முறையிலான அரசமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றைத் தயாரித்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வில் தனித்துக் செயற்படுவதில்லை போன்ற முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை கடந்த 19 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடி நிலைகள் காரணமாக அச்சந்திப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான க.ச. இரத்தினவேல், வி.புவிதரன், பேராசிரியர் அ. சர்வேஸ்வரன், சுகந்தி இராஜகுலேந்திரா, வ.ச.நிறைஞ்சன், ஞா.க. ரனித்தா மற்றும் ம. யூட் டினேஷ் ஆகியோர் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கூடி இது குறித்து ஆராயவுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் வசதியைப் பொறுத்து, இந்த இரண்டாவது தீர்க்கமான சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0