உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பூவரசங்குளம் மக்களின் காணி பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை – சத்தியலிங்கம் உறுதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் மற்றும் அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் குறைகேள் சந்திப்பில் ஈடுபட்டார்.பூவரசங்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வட்டார பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா ரவீந்திரனும் கலந்து கொண்டார்.


இதன்போது பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், குறிப்பாக வனவள திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் மக்களின் காணிகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.


இந்த விடயங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், அரசாங்க அதிபர், வனவள திணைக்களம்மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

80 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0