21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெப்ப எச்சரிக்கை.!
மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (ஏப்ரல் 2) முதல் அமுலுக்கு வரும் இந்த அறிவுறுத்தலின்படி, 21 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு கடும் சோர்வு ஏற்படலாம் என்றும், தொடர்ந்து உடல் உழைப்பு மேற்கொண்டால் வெப்பத் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தேவையற்ற நேரங்களில் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் அருந்தவும், வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொள்ளவும் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்