உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நீடித்த எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராகுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் அவசர எச்சரிக்கை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.

இந்தச் சூழலில், இன்று(31.3.2026)நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்திற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி ஆணையர் டான் ஜார்ஜென்சன் அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எரிசக்தி விநியோகத் தடையை எதிர்கொள்ள நாடுகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பாவிற்கான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களான ‘ஜெட் எரிபொருள்’ மற்றும் டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ப்ரஸ்ஸல்ஸ் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பா தனது விமான எரிபொருள் தேவையில் சுமார் 15 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் 10-ஆம் திகதியளவில் ஐரோப்பாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் அவசரமற்ற பராமரிப்புப் பணிகளைத் தள்ளிவைக்குமாறும், உற்பத்தியைக் குறைக்க வேண்டாமென்றும் ஜார்ஜென்சன் பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பாவிடம் சுமார் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை என ‘ஆர்கஸ் மீடியா’ தெரிவித்துள்ளது.

இதற்கு மாற்றாக அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருளைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய எரிசக்தி அமைச்சர்களின் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0