உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இலங்கை அரசு சவூதியை நாடிய பின்னரே இந்தியா தலையிட முடியும்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
44 பார்வைகள்

சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை அரசு அதிகாரபூர்வமாகச் சவூதி அரசை நாடி கோரிக்கை விடுத்த பின்னரே, இது தொடர்பில் இந்தியா தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று இந்தியத் தூதுவரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது சிவராசா அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீட்டைக் கோரி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினர் இந்தியத் தூதுவரிடம் இந்தியப் பிரதமருக்கான எழுத்து மூலமான மனுவொன்றைக் கையளித்தனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன், பொதுச்செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

இலங்கை அரசு அதிகாரபூர்வமாகச் சவூதி அரசை நாடி முறையான கோரிக்கையை விடுத்தால் மட்டுமே, இந்த விவகாரத்தில் இந்திய அரசால் தனது தூதரக மற்றும் அரசியல் முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெளிவுபடுத்தினார்.

இலங்கை அரசின் அதிகாரபூர்வ முயற்சிகளுக்குத் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேவேளையில், அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அனோஜன் விவகாரத்துக்கு ஒட்டுமொத்த இலங்கையர்கள் சார்பாகவும் விரைவான தீர்வு தேடவே தமிழ் முற்போக்குக் கூட்டணி விரும்புகின்றது என்று மனோ கணேசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரைகளை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே நாங்கள் அந்த மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து வழங்குவதற்குரிய…

73 0 0
இலங்கை செய்திகள்

வாகரையில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழர் தாயக பிரதேசங்களி தியாகி திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்…

89 0 0
இலங்கை செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை மின்னேரியாவில் சட@லமாக மீட்பு!

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

93 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கான பேச்சு திடீரென இடைநிறுத்தம்!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள்…

81 0 0