உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
83 பார்வைகள்

ஆங்கிலக் கால்வாயில் சிறு படகுகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும் வகையில், பிரான்சுடன் 650 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்கான இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.

2023 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தற்போதைய 475 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒப்பந்தம், இன்று 31 ஆம் திகதி நள்ளிரவு காலாவதியாக உள்ள நிலையில், புதிய மூன்றாண்டு நிதித் தொகுப்பைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரெஞ்சுக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இடைமறிப்பு விகிதத்தை எட்டிய பின்னர் பணம் விடுவிக்கப்படும் வகையில், கடுமையான நிபந்தனைகளை இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், நிதியுதவியை இடைமறிப்பு விகிதங்களுடன் இணைப்பதை பிரெஞ்சு அதிகாரிகள் எதிர்த்துள்ளனர்.

இது புலம்பெயர்ந்தோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அதேவேளையில், தற்போதைய புள்ளிவிவரங்கள் பிரான்ஸ் 33 சதவீத எல்லைக் கடப்புகளை இடைமறிப்பதாக வெளிக்காட்டுகின்றன.

வடக்கு பிரான்சில் உள்ள புதிய புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கான கோரிக்கைகளையும் பிரிட்டிஷ் பேச்சுவார்த்தையாளர்கள் நிராகரித்துவிட்டதாக ‘திடைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0