உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பின்லாந்தில் விழுந்து நொருங்கிய உக்ரைனிய ட்ரோன்: நேட்டோ நாட்டு எல்லைக்குள் போர் பதற்றம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர், முதல்முறையாக பக்கத்து நாடான பின்லாந்தின் எல்லைக்குள் ஊடுருவியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று பின்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் விழுந்து நொருங்கிய உக்ரைனிய ட்ரோன் ஒன்றில், வெடிக்காத நிலையில் ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டு (Warhead) இருந்ததாகப் பின்லாந்து பொலிஸார் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.


அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ள உக்ரைன், சுமார் 6.7 மீட்டர் இறக்கை விரிப்பு கொண்ட இந்த ‘AN-196’ ரக ட்ரோன், பின்லாந்து அதிகாரிகளால் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதமோ ஏற்படவில்லை என்றாலும், ரஷ்யாவுடனான போர் ஐரோப்பிய நாடுகளின் எல்லைக்குள் பரவுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்திற்கு உக்ரைன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி வழித்தடங்களை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த ட்ரோன், ரஷ்யாவின் மின்னணு குறுக்கீடுகள் (Electronic Interference) காரணமாகத் திசைமாறி பின்லாந்து எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என உக்ரைன் விளக்கமளித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோர் இது குறித்துத் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

தீவிரப்படுத்தியுள்ள நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்
“நாங்கள் இருவரும் இந்தச் சூழலை ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம்; தேவையான தகவல்களைப் பகிர்ந்து வருகிறோம்” என்று ஸெலென்ஸ்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாக, ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை முடக்க உக்ரைன் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக பின்லாந்து எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யப் பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்படுகின்றன.

சர்வதேச எரிசக்தி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இத்தகைய தாக்குதல்களைக் குறைக்குமாறு உக்ரைனின் சில நட்பு நாடுகள் சமிக்ஞை கொடுத்த போதிலும், பின்லாந்து அதிபர் அத்தகைய கோரிக்கை எதையும் உக்ரைனிடம் முன்வைக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

லூமாகி (Luumaki) பகுதியில் மற்றொரு ட்ரோனின் சிதிலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அது குறித்தும் பின்லாந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0