உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

2026 இல் சர்வதேச சந்தையில் தடம் பதிக்கும் BYD : 15 இலட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் BYD எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குள் சர்வதேச சந்தையில் 1.5 மில்லியன் (15 லட்சம்) வாகனங்களை விற்பனை செய்யும் இலக்கை எட்டும் என தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்டவை இனி வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்தே கிடைக்கும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டில் நிலவும் கடும் விலை போட்டி காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இலாபம் எதிர்பார்த்ததை விடக் குறைந்த போதிலும், சர்வதேச விரிவாக்கத்தின் மூலம் அதனை ஈடுகட்ட BYD திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய, ஐரோப்பா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள BYD தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பெரும் அளவிலான உற்பத்தி (Mass Production) தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் விலைக் குறைப்புப் போட்டியில் ஈடுபடாமல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் (Innovation) அதிக முதலீடு செய்து சந்தையில் தனித்து நிற்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், சீன அரசாங்கம் வாகனத் துறையில் நிலவும் தேவையற்ற விலை குறைப்புப் போட்டிகளைக் கட்டுப்படுத்த புதிய விலைக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு விற்பனை கடந்த ஆண்டு 22.7 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அது 50 சதவீதத்தை எட்டியுள்ளது நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0