உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் மிகப் பெரிய ஆயுத கிடங்கு மீது அமெரிக்கா தாக்குதல்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்படவில்லை என்றாலும், ஈரான் மீதான “ஆபரேஷன் எபிக் ப்யூரி” இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் விரும்புவதாக தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை 6.20 மணியளவில் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் காணொலி ஒன்றை எதுவும் குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தார்.

இந்த தாக்குதலானது, ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 கிலோ பங்கர் – பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் மத்திய பகுதியில் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் கிடங்கு, இராணுவம் மற்றும் அணுத் திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது.

ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இஸ்ஃபஹான் நகரில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.இந்த நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ஃபஹான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0