பலஸ்தீன தாக்குதலாளர்களுக்கு மரண தண்டனை: இஸ்ரேல் பாராளுமன்றம் சட்டமூலம் நிறைவேற்றம்.!
கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்களினூடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது.
இச் சட்டமூலமானுது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.