உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் – அமெரிக்கா போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கேன்சர் மருந்துகள், இன்சுலின், உயிர்க் காக்கும் மருந்துகளின் விநியோகம் தாமதப்படுவது மட்டும் அல்லாமல் அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் பல மருந்து பொருட்களுக்கு இறக்குமதியைச் சார்ந்தே உள்ளன.

இந்நிலையில் ஈரான் போர் நீடித்தால், இங்கு மருந்து விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மருந்து விலையும் அதிகரித்து வருகின்றது. பல நாடுகளின் விமானப் போக்குவரத்துக்கு துபாய் மையமாக விளங்கியது. இங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருந்துகளின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரகால மருந்துகள் பல வழிகளைச் சுற்றி அனுப்பப்படுகின்றன. எரிபொருள் பற்றாக்குறை மருந்துகளின் விநியோகத்தை தாமதப்படுத்தியுள்ளது. காசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மருந்துகள் எல்லாம் பல இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. கேன்சர் மருந்துகள் உள்ளிட்ட சில மருந்துகளுக்கு குளிர்சாதன வசதி தேவை. அதனால் ஈரான் போர் நீடித்தால் இவற்றின் விநியோகம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0