உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனா – வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

சீனா – வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (30) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.சீனாவின் பெய்ஜிங் நகர் முதல் வடகொரியாவின் பியான்யாங் நகருக்கு பயணிகள் விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று வட கொரியா சென்றுள்ள சீனா ஏர் பயணிகள் விமானத்தை வட கொரியாவிற்கான சீனத் தூதுவர் உள்பட பலரும் அங்கு வரவேற்றனர். இரு நாடுகளுக்குமிடையே ரயில் சேவை கடந்த மார்ச் 12 அன்று தொடங்கியது.

கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கிய 2020 முதல் சீனா – வடகொரியா இடையே ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் மற்ற நாட்டு பயணிகளுக்குத் தடை விதித்த வட கொரியா 2024-ம் ஆண்டு ரஷ்ய பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளது.

பெருந்தொற்று தடைக்கு முன்னர் வட கொரியாவுக்கு செல்லும் பயணிகளில் 90% பேர் சீனர்களாக இருந்தனர். ஆனால், பின்னர் மீண்டும் அந்த பயணத்தைத் தொடங்குவதற்கு சீனா தாமதப்படுத்தியதன் காரணம் தெரியவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0