அமெரிக்க படை வீரர்கள் சுறாக்களுக்கு இரையாவார்கள் – ஈரான் எச்சரிக்கை.!
ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அதற்கு கடுமையான பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
மோதல் நிலை தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க படையினருக்கு கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் இலக்காகக் கொள்ளலாம் என ஈரான் முன்வந்துள்ளது.இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்பதற்றம் மேலும் அதிகரித்து, போர் அபாயம் தீவிரமடைந்து வருகிறது.