தரம் 5 புலமைப்பரிசில் 2026 – விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்.!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (30) முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.இதற்காக பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.