உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வைத்தியசாலை சேவைகள் நாளை முடங்கும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அரச சேவையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அநீதியான வைத்திய இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளமையே இந்தப் போராட்டத்திற்குக் காரணம் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், தன்னிச்சையான மற்றும் முறையற்ற இடமாற்றங்கள் காரணமாக வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்விதமான சாதகமான தீர்வுகளும் எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாளை நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட ஏனைய சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அவசர சிகிச்சை சேவைகள் மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0