உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

புத்தளம் – தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 468 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் அதிரடியாகப் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை அதிகாரிகள், 26ஆம் திகதி இரவு புத்தளம் எரம்புகொடெல்ல கரையோரப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 15 பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அந்தப் பொதிகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டன.

கடற்படையினரின் தீவிர ரோந்து நடவடிக்கையினைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளை கடற்கரையில் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0