உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வேகமாக வந்த சிற்றூந்து மோதியதில் 7 பேர் காயம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
65 பார்வைகள்

பிரித்தானியாவின் டெர்பி (Derby) நகர் மையப்பகுதியில் உள்ள பிரையர் கேட் பகுதியில், 28 ஆம் திகதி சனிக்கிழமை இரவு அதிவேகமாக வந்த கறுப்பு நிற சுஸுகி ஸ்விஃப்ட் ரக சிற்றூந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், நீண்டகாலமாக பிரித்தானியாவில் வசித்து வருபவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள போதிலும், அவர்கள் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் இது ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, அந்தப் பகுதியில் தடயவியல் நிபுணர்கள் மேலதிக சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வாகனங்களை ஆயுதமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளதாக அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் அட்கின்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0