உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை புறக்கணித்த ; வளைகுடா நாடுகள்

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
67 பார்வைகள்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு முன்னணி வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் இதுவரை சாதகமான பதிலளிக்கவில்லை என சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் செயல்பாட்டு சவால்களுக்கு மத்தியில் மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு கோரப்பட்ட போதிலும், எந்தவொரு நிறுவனமும் விருப்பம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வளைகுடா விமான நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மத்தளவிற்கு மாற்றுவதில் சிரமங்கள் உள்ளன. ஏனெனில் இந்த விமான நிலையத்தினால் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும்.

எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தரையிறக்கம் மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள் இலவசமாக வழங்கப்படும் என இலங்கை அறிவித்திருந்தது.

இருப்பினும், நிறுவனங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டனவே தவிர, ஆர்வம் காட்டவில்லை. வளைகுடா விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்ததாக வெளியான செய்திகளையும் பிரதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.

விமான போக்குவரத்து ஆய்வாளர் பென்ஸ்லாப்பிக் (Ben Schlappig) இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “கிழக்கு-மேற்கு வான்வழிப் பாதையில் மத்தள விமான நிலையம் கொண்டுள்ள புவியியல் ரீதியான சாதகம் ஒரு நல்ல விடயம். இருப்பினும், தரைவழி கையாளுதல் (Ground handling), எரிபொருள் விநியோகம் மற்றும் விமான ஊழியர்களுக்கான தங்குமிட வசதி போன்ற சவால்களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0