இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 125 வெளிநாட்டவர்கள்.
இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 125 வெளிநாட்டவர்கள்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீன நாட்டவர்கள் அடங்கிய குழு ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடு கடத்தும் நடவடிக்கையை எளிதாக்குவதற்காக சீனாவிலிருந்து ஒரு சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மார்ச் 17 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் உள்ள பல தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து, இணையவழியில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை, இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ளது .
விசாரணையின் போது சீன நாட்டினர் சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்திருந்தும், விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சீன அரசாங்கத்துடனான கலந்தாலோசனைகளுக்குப் பின்னர், அவர்களை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது.
செயல்முறையை மேற்பார்வையிடுவதற்காக, சீனாவின் குடிவரவுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று, ஒரு மருத்துவருடன் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
இதன்படி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவினருடன் சீன நாட்டினர் இலங்கையை விட்டு வெளியேறியதையடுத்து, நேற்று இரவு 30 ஆம் திகதி இந்த நாடு கடத்தும் நடவடிக்கை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.