எதிர்வரும் நாட்களிலும் தணியாத வெப்பம்.! பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!
இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால் வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேல், சபரகமுவா, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த எச்சரிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர். முன்கூட்டியே அறிவித்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடிந்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே, வெப்பத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பச் சோர்வைத் தவிர்க்க அதிகளவில்தண்ணீர் அருந்தவும், நேரடி வெயிலில் செல்வதை தவிர்க்கவும் வளிமண்டலவியல் திணைக்களமும் சுகாதார நிபுணர்களும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களிலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.