உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர விடுவிப்பு – கம்பஹா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

சந்தருவன் சேனாதீர மீது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கிலிருந்து விடுவிக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.சுமார் 16 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்து வந்த அவர், கடந்த மார்ச் 11, 2026 அன்று இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றது.எனினும், நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கில் சந்தருவன் சேனாதீர தொடர்புடையவர் அல்லர் எனகுற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து, அனைத்து குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் அவர் வெளிநாடு சென்றிருந்ததுடன், 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் இலங்கை திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0