உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதிகளில் இருந்து சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பொதிகளில் இருந்து சுமார் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 928 கார்டன் சிகரெட்டுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

.
சுங்க அதிகாரிகளின் கடுமையான சோதனைகளை அஞ்சிய கடத்தல்காரர்கள், அவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலையில் விமான நிலையத்திலேயே கைவிட்டு சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக சுங்கப் பிரிவின் பொறுப்பில் இருந்த இந்தப் பொதிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.


இதனையடுத்து நேற்று அவை திறந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதுசூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0