புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நிறுத்துமாறு ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்.!
புதன்கிழமைகளில் நடைபெறும் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இது கட்டாய உத்தரவு அல்ல என்றும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுக்கப்பட்ட வேண்டுகோள் மட்டுமே எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக திறனை ஒதுக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமைகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும், சுகாதாரம், வங்கி, மின்சாரம், குடிநீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.