உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின் பெயர்ப் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.இந்தப் பட்டியல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தொடர்பாக மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை இணையவழி அல்லது விண்ணப்பப் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் இறுதி திகதி 2026 ஏப்ரல் 10 ஆகும். ஒருவருக்கு ஒரு மேன்முறையீட்டை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், தகுதியற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டால், பொதுமக்கள் அத்தகையவர்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும், அவை அநாமதேயமாகவும் சமர்ப்பிக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0