கரீபியன் கடல் பகுதியில் இரு கப்பல்கள் மாயம்.!
மெக்சிகோவிலிருந்து கியூபா நோக்கிச் சென்ற இரு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பலே கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளது.
குறித்த கப்பலில் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்துள்ளதோடு, கப்பல்கள் தொடர்பான அனைத்து தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.