உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ரெப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலன் எனப் பிரபலமாக அறியப்படும் பலேந்திர ஷா (Balendra Shah), நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்றார்.நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பௌடல் அவருக்குப் பதவி மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணத்தை செய்து வைத்தார்.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ராம் சஹாய பிரசாத் யாதவ், தலைமை நீதிபதி பிரகாஷ் மான் சிங் ராவத், தேசிய சட்டமன்றத் தலைவர் நாராயண் பிரசாத் தஹால், முன்னாள் பிரதமர்கள், மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் தூதரக சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

35 வயதான இவர், வியாழக்கிழமை அன்று ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில், ஷாவின் தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சபையில் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை உறுதி செய்தது.

தலைமுறை மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சியையும் கோரி கடந்த ஆண்டு நடந்த வன்முறைமிக்க ஜென் போராட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், அது பாரம்பரியக் கட்சிகளைப் படுதோல்வி அடையச் செய்தது.

பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி வாக்களிப்பு மூலமாகவும், 110 பேர் விகிதாசார வாக்களிப்பு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0