உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
85 பார்வைகள்

சுகாதார காப்பீட்டு அமைப்பைச் சுற்றிய மிகப்பெரிய மோசடி வழக்கில், 58 மில்லியன் யூரோ அளவிலான நிதி முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரிஸ் பொது வழக்கறிஞர் லோர் பெக்குவோ அறிவித்துள்ளார். இவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி, பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் குற்றத் திட்டத்தில் பங்கேற்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்கள் நீதிமன்ற கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300,000 யூரோக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 18 சுகாதார மையங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பல் சிகிச்சை மையங்கள், 2024 ஆம் ஆண்டு இறுதியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதன் பின்னர், “பொய்யான சிகிச்சை சேவைகள்” வழங்கப்பட்டதாகக் காட்டி அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

இந்த சேவைகள் பெரும்பாலும் கூடுதல் சுகாதார காப்பீடு பெற்றவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கமான செலவுகளை விட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்செய் நகரில் உள்ள ஒரு மையத்தில், 2021 ஆம் ஆண்டு இறந்த பல் மருத்துவரின் பெயரில் கூட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில், பல நோயாளர்கள் அந்த சிகிச்சைகளை பெறவில்லை என்றும், சிலர் அந்த மையங்களுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பான விசாரணை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டதுடன், பெயரில்லாத முறையில் வந்த ஒரு தகவலும் இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0