உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோதமாக இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடை முற்றுகை; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கொழும்பு – பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருக்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மாட்டிறைச்சி கடை ஒன்றை ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை (26) முற்றுகையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்கை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33, 34 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டு இறைச்சி கடையை நடத்தியமை மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 02 மாடுகள், கோடரி மற்றும் 02 கத்திகள், மாடுகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0