உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இணையம் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
44 பார்வைகள்

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போதும், பொதிச் சேவைகளைப் பெறும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளை அழுத்துவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதால் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது அல்லது விரைவு பொதிச் சேவைகளைப் பெறும் போது கிடைக்கும் சந்தேகமான லிங்குகளை அழுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பொருளை ஓர்டர் செய்த பின்னர், தொடர்புடைய நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல்களை உறுதிப்படுத்துங்கள்.

குறுஞ்செய்தி அல்லது Messenger மூலம் வரும் ‘Update your details’ போன்ற லிங்குகளை அழுத்தி உங்கள் வங்கி அட்டை விவரங்களை வழங்க வேண்டாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம் பணத்தை திருட வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0