மசகு எண்ணெயின் விலை அதிரடியாக உயர்வு.!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர் மட்டத்தில் உள்ளது.அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107.02 அமெரிக்க டொலராக நிலவுகிறது.ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 94.2 அமெரிக்க டொலராகப் பட்டியலிடப்பட்டுள்ளது.