உயர்தரப் பரீட்சை முடிவுகள் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக வெளியிட எதிர்பார்ப்பு.!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடும் நோக்கில் இறுதி கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கிய உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள் கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.