ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்று (27.03.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள போஸ்ட் விடுதியில் நடைபெற்றது.இக்கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.
இதில் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான வேந்தன், ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் மற்றும் சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.