உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மணல்காட்டுக்கு சுற்றுலா சென்றவர்களை பொலிஸார் தாக்கிய விவகாரம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

பருத்தித்துறையிலிருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் மீது சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், பொலிஸ் வாகனத்தில் வந்த சிவில் உடையணிந்த பொலிஸார் இளைஞர் குழுவை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாண பிராந்திய அதிகாரிகள் காயமடைந்தவர்களிடம் மந்திகை வைத்தியசாலையில் வைத்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0