உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் இளம் பெண் படுகொலை: நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பாழடைந்த கிணற்றில் காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு பெண்ணும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், கடந்த 28.02.2026 முதல் காணாமல் போயிருந்த மண்முனை நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என அவரது குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திருப்தியாக ஆறுதல் தெரிவித்தார். குடும்பத்தினர், “இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராகக் கூடாது” என்று கோரிக்கை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 27.03.2026 காலை 08.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு கச்சேரி வரை, மண்முனை நாற்பதாம் கிராம மக்களால் நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியதாவது:“

எமது பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தக் கொடூரச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண் காணாமல் போனதாகத் தகவல் வந்த பின்னரும், காவல்துறை தாமதமாக விசாரணை மேற்கொண்டுள்ளது. காவல்துறை அலட்சியம் அடுத்தடுத்த குற்றச்செயல்கள் மற்றும் கொலை முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதியான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகையால், நாளை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு பேரணியில் நானும் கலந்து கொள்வேன்.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0