கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்.!
மோட்டார் வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் இன்று (26) முற்பகலில் கைது செய்துள்ளனர்.
இதில் முன்னாள் அபிவிருத்தி உதவியாளர் (வீதி பாதுகாப்பு) முறையான ஆரம்பப் பதிவு இல்லாத 03 வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றம் செய்தமைக்காக, முன்னாள் விசாரணை உதவியாளர் அந்த 03 வாகனங்களுக்கு சட்டவிரோதமாக கருமபீட இலக்கங்களை வழங்கியமைக்காக, மற்றும் முன்னாள் உதவி ஆணையாளர் அந்த வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றம் செய்ய அனுமதி அளித்தமைக்காக கைது செய்யப்பட்டார். கைதான சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.