உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு கூட்டம்: அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வேலைத்திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


அத்துடன், திக்கம் பகுதியில் பனங்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் மற்றும் பனைப்பொருட்கள் தயாரிப்பில் விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வல்வெட்டித்துறை பகுதியில் கரையோர பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் நகர சபை சட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்ட மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலர் தலைமையிலான அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0