இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்.!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிராந்திய தாக்கங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த உரையாடல் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பயனுள்ள உரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் விளைவுகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும்வளர்ச்சியை உறுதிப்படுத்தும் செயற்திட்டங்கள் மீதான அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இருதரப்பு உரையாடல் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.