உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மட்டக்களப்பில் வழமை போன்று இயங்கி வரும் தனியார் பேருந்து சேவைகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் முடங்கியுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமை போன்று இயங்கி வருகின்றது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மை கருதி தொடர்ந்து சேவையினை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பிலிருந்து தூர இடத்திற்கான சேவைகளும் குறுந்தூர சேவைகளும் நடைபெற்று வருவதை காணமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தனியார் பேருந்துகளுக்கும் உள்ள போதிலும் மக்களின் நன்மை கருதி சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தமது நிலைமையினை கருத்தில்கொண்டு தமக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0