உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தெஹ்ரான் முழுவதும் பாரிய வெடிப்பு சத்தங்கள்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டபோது இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன.

இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தமும், வெடிப்புகளும் பதிவாகி வருகின்றன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது நடத்தி வரும் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

நள்ளிரவைத் தாண்டிய வேளையில் நிகழ்ந்து வரும் இந்தத் தொடர் வெடிப்புகளால் தெஹ்ரான் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.பலர் நிலத்தடி பாதுகாப்பு அரண்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0