உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் உயர்நீதிமன்றம் விஷேட தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0