உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தில் மெனிஞ்சைடிஸ் தொற்று தீவிரம் – கென்ட் பகுதியில் அவசர எச்சரிக்கை.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
51 பார்வைகள்

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் மெனிஞ்சைடிஸ் (meningitis) நோய் மிக வேகமாக பரவி வருவதால், பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், கேன்டர்பரியில் உள்ள ஒரு இரவு விடுதி மூலம் தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் இதனை ‘Super Spreader’ நிகழ்வாகக் கருதி, சுமார் 5,000 மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை அவசரமாக முன்னெடுத்து வருகின்றனர். தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக 6,500க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் கண்களில் சிவப்பு நிறம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கீர் ஸ்டார்மர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0